எமது ஒளிரும்வாழ்வு அமைப்பானது யுத்தத்தால் மற்றும் பிறப்பால் விசேட தேவையுடைய துணுக்காய் பிரதேச செயலக எல்லைக்குள் வாழ்கின்ற மாற்று வலுவுள்ளோரையும் அங்கத்தவர்களாக கொண்டு 2012ம் ஆண்டு ஒளிரும் வாழ்வு அமைப்பு உருவாக்கப்பட்டது. வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தில் பதிவுசெய்து இலங்கை வங்கியில் கணக்கு வைத்து பிரதெச செயலாளளரின் கண்காணிப்புடன் நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டு இயங்கிவருகிறது. இந்நிலையில் பல உதவும் நிறுவனங்களினதும், தனிப்பட்ட நபர்களினதும் நிதி உதவிகளைப் பெற்றுமருத்துவம், கல்வி, வாழ்வாதாரம் என்பவற்றின் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு இவ்வமைப்பு செயற்பட்டு வருகிறது. தற்போது தாய் தந்தையை இழந்த பிள்ளைகள்,பெண்தலைமைத்துவ குடும்பங்கள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகிய இலக்குக் குழுவினர் மத்தியிலும் உதவி வருகிறோம். தனிப்பட்ட வாழ்வாதார உதவிகளை மேற்கொண்ட நாம் தற்போது நிலைபேறான வருமானத்தை ஈட்டு முகமாக ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப் பண்ணை, உணவு உற்பத்தி நிலையம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறோம்
அமைப்பின் செயற்பாடுகளில் ஒன்றாகிய மகிழ்வு இல்லம் திட்டத்தில் மாற்றுத்திறனாளி பிள்ளைகளிற்கான கல்வி, இயன் மருத்துவம், உள ஆற்றுப்படுத்தல், மற்றும் தொழிற்கல்வி போன்ற செயற்பாடுகளை வழங்கி வருகிறோம் இச் செயற்பாடுகளின் போது பிள்ளைகள் நிலையத்திற்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வருகை தந்து (காலை 8.30-மாலை 4.30 வரை) பயிற்சிகளை பெற்றுக் கொள்வார்கள் இவர்களிற்கு பயிற்சி நாட்களின் எண்ணிக்கை போதாமையால் மேலும் வாரத்தில் ஜந்து நாட்களாக மாற்ற வேண்டிய அவசியமுள்ளது. இதற்கு நிதி தேவை காரணமாக மாற்றம் செய்ய முடியாமல் உள்ளமை குறிபப்பிடத்தக்கது. (பயிற்சிக்கு பிள்ளைகள் வருகை தரும் நாட்களில் சிற்ரூண்டி, மதியஉணவு, போக்குவரத்து அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது)