Address

No - 96, Clock Tower Road, Jaffna

Phone Number

0094779967140

Email Address

info@emcharity.com

Change the Language

ENGLISH

எங்கள் பார்வை

மாற்று வலுவுடையோர்க்கு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆன்மீக, கல்விசார், மருத்துவ, பொருளாதார செயற்பாடுகள் மூலமாக எவ்வித பாகுபாடுமின்றி நிறைவான வாழ்வு வாழ வழிகாட்டல்

எங்கள் பணி

மாற்று வலுவுடையோர்க்கு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆன்மீக, கல்விசார், மருத்துவ, பொருளாதார செயற்பாடுகள் மூலமாக எவ்வித பாகுபாடுமின்றி நிறைவான வாழ்வு வாழ வழிகாட்டல்

--}}

செயற்திட்டங்கள்

புகைப்படத்தொகுப்பு

Contact Info

About Organization

மாற்றுவலுவுடையோர்க்கான வலுவூட்டல் அமையம் - வன்னி

மாற்றுவலுவுடையோர்க்கான வலுவூட்டல் அமையம் - வன்னி

VAROD வன்னி மாற்றுவலுவுடையோர் வலுவூட்டல் அமையமானது இறுதி 
யுத்த தறுவாயில் அல்லலுற்ற மக்களுக்காக மன்னார் ஆயர் இராயப்பு 
ஜோசப் ஆண்டகையை புரவலராகக் கொண்டு, கிளரேசியன் துறவற 
சபையினால், 2009 இல் வன்னி மக்களுக்காகத் தனது சேவையினைத் 
தொடங்கியது. அத்தோடு மட்டும் நின்றுவிடாது, நீண்ட கால வன்முறை 
நிறைந்த போருக்குப் பின்னரும் ஆன்மீகம், கல்வி, ஆரோக்கியம், ஒழுக்கம், 
பண்பாடு ஆகிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு நலிவுற்ற 
சமூகப் பின்புலன்களைக் கொண்ட குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் 
வயோதிபர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக வழி வகுத்து தனது சேவையைத் 
தொடர்வது யாவரும் அறிந்ததே. 

2020 ம் ஆண்டில் தனது 11வது வருடத்தினில் காலடி வைத்திருக்கும் 
வரோட் அமையமானது, உள நல பாதிப்புடைய மாற்று வலுவுள்ளோருக்காக, 
நிலையம் மற்றும் சமூகம் சார்ந்த வலுவூட்டல் செயற்பாடுகளையும் 
முன்னெடுத்து வருவது அமையத்தின் மிக முக்கிய பங்காக திகழ்கின்றது.
நிலையம் சார் வலுவூட்டல்

வரோட் அமைய வலுவூட்டல் நிலையங்களாக 
• கிளாரட் அருணோதய பெண்கள் நிலையம் 
• அமல மரியாள் விடிவெள்ளி ஆண்கள் நிலையம் 
• வரோட் லைஃப் (VAROD LIFE) வலுவூட்டல் நிலையம் என்பன வரோட் 
நிலையம் சார் வலுவூட்ல் அமையங்களாக இயங்கி வருகின்றன. 
மேலும், நலன் விரும்பிகள் மற்றும் நல்லுள்ளங்களின் உதவியினாலும் 
அனுசரனையினாலும், வரோட் அமையத்தினால் ஒரு பிள்ளைக்கான ஆதரவுத் 
திட்டம், பல்கலைக் கழக மாணவர்களுக்கான ஆதரவுத் திட்டம், மாலை 
நேரக் கல்வி, கிளாரட் சிறுவர் முன் பள்ளி எழுச்சித்திட்டம், கல்வி 
உதவிகள், மருத்துவ உதவிகள், ஆதார உபகரண உதவிகள், தொழிற் 
பயிற்சிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் போன்ற செயற்பாடுகள் 
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமையத்தின் பணிகள் அத்தடன் மட்டும் நின ;றுவிடாது, பயனாளிகளின் 
எதிர்கால நன்மையினைக் கருத்திற் கொண்டு கால் நடை வளர்ப்பு, 
விவசாயம், சிறு தோட்டம் அமைத்தல், தையற் பயிற்சி, கைப் பணிப் பொருட்கள் தயாரித்தல், வெதுப்பகப் பயிற்சிகள், கணனிப் பயிற்சிகள் 
போன்ற துறைகளில் சுயமாகச் செயற்படும் விதத்தில் பயிற்சியளிக்கப்பட்டும் 
வருகின்றது.

Social Profile